போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
இலங்கையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் போதுமான எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (FSOA) தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாகன இலக்க தகடுகளில் உள்ள கடைசி இலக்கத்தின் பிரகாரமும் QR குறியீட்டின் பிரகாரமும் எரிபொருள் விநியோகம் இடம்பெறும். மேலும், QR குறியீட்டைப் பெறுபவர் அதைச் சமர்ப்பித்து எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருளைப்பெற்றுக்கொள்ளலாம்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
QR குறியீட்டு முறையில் எரிபொருள் விநியோகம்
“இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பொதுமக்கள் வீணாக வரிசையில் காத்திருக்க வேண்டாம். மேலும், இராணுவத்தால் வழங்கப்படும் டோக்கன்கள் 21ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படும்.
QR குறியீடு முறையின் கீழ், கோட்டா ஒதுக்கீட்டு முறையில், வாகன உரிமையாளர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.
இது ஒரு நீண்ட கால திட்டமாகும். எனவே, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்” என அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.