அரசாங்க வங்கியில் 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பெண் கைது!
அரசாங்க வங்கியில் 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கடவத்தை அரசாங்க வங்கியொன்றில் போலி ஆவணங்களை வெவ்வேறு நபர்களை போன்று சமர்ப்பித்து 48 தனிநபர் கடன்கள் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வங்கி ஊழியரான மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.அதேவேளை மோசடிக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் குறித்த வங்கியின் வங்கி கடன் பிரிவில் சேவைபுரிந்து ஓய்வு பெற்ற உதவி பொதுமுகாமையாளர் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் 62 வயதுடையவர் என்பதுடன் கடவத்தையை சேர்ந்த அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.