ஆசிரியரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த பாடசாலை மாணவன்!
கிளிநொச்சியில் மாணவன் பாடசாலை வரவில்லை என ஆசிரியர் கண்மூடித்தனமாக அடித்ததில் சிறுவன் பலத்த காயம் அடைந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலைக்கு சிறுவனின் சைக்கிள் தொலைந்ததால் பள்ளிக்கு வரமுடியாத நிலையில் இருந்துள்ளதையடுத்து பாடசாலைக்கு இன்றையதினம் சென்றுள்ளான்.
இதனையடுத்து வராத நாட்களில் தந்த வீட்டுப்பாடங்களை முடிக்கவில்லை என ஆசிரியர் தாக்கியுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் வேறு பாடசாலையில் மகனை சேர்த்துக்கொள்கிறோம் என கூட்டிச்சென்றுள்ளனர்.
மேற்படி விவகாரம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.