ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
ஆசிரியர் ஒருவரை காதலிப்பதாக கூறி 23 லட்டசத்தை திருடிச்சென்ற குடும்பஸ்த்தர்!

ஆசிரியர் ஒருவரை காதலிப்பதாக கூறி 23 லட்டசத்தை திருடிச்சென்ற குடும்பஸ்த்தரை ஆசிரியை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவமானது மொனராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவர் தனது காதல் வலையில் ஆசிரியையை வீழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து தனது சொந்த செலவுகளுக்கு ஆசிரியையிடம் பணம் பெற்று வந்துள்ளார்.
மேலும் ஆசிரியையின் கடன் அட்டை மூலம் பணத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில் அந்நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
இதனால் சந்தேக நபர் மீது பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.