ஆராயப்படும் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை!
நாட்டில் கோழி மற்றும் முட்டையில் விலை அதிகரித்துள்ள நிலையில் கோழி உற்பத்தியாளர்கள் இன்று நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழியிறைச்சியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அது தொடர்பில் ஆராயும் வகையிலேயே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று அறிவித்தார்.
அதேவேளை தற்போது ஒரு முட்டையின் விலை ரூ.63/-க்கும், 1கிலோ கோழியிறைச்சி ரூ.1500/-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.