போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் சோகமான இறுதி நாட்கள்!
தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவால் இலங்கையில் திடீரென உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரைப் பார்க்க கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த இளையராஜா அங்கு கண் கலங்கி நின்றதாக அவர்களுடன் இருந்த சிவில் செயற்பாட்டாளர் சுரேன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பிரபல ஊடகம் ஒன்று வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் பவதாரணியின் இறுதி நாட்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,
இலங்கையில் இருக்கும் திரைப்பட நிறுவனம் ஒன்றின் ஊடாக பாடகி பவதாரணிக்கு உதவும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரது கணவர் சபரி என்னை தொடர்பு கொண்டார்.
அதன் பிறகு அவர்கள் தங்குவதற்கு வீடு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன். பவதாரணி முதலில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்தார். அதன் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
அதேசமயம், இலங்கையில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா வருகைத் தந்து கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்.
இதனை அறிந்த பவதாரணி தனது தந்தையை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்ததன் காரணமாக அவரை சந்திப்பதற்கான வாய்ப்பையும் பவதாரணியின் கணவர் சபரி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
ஆனால், இதுதான் பவதாரணியின் இறுதி ஆசை என்று அறிந்திருக்கவில்லை போலும். அன்றைய தினம் இரவு வெகு நேரமாக தனது தந்தை இளையராஜாவை சந்தித்து பவதாரணி பேசிக் கொண்டிருந்தார்.
இருப்பினும், மறுநாளே பவதாரணிக்கு உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு காலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று மாலையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என்பதையும் பவதாரணியின் கணவர் சபரி எனக்கு அறிவித்தார்.
அதன் பின்னர், இசைஞானி இளையராஜாவும் வைத்தியசாலைக்கு விரைந்து வந்ததுடன், மகளைப் பார்த்து கண் கலங்கி நின்றிருந்தார் என தெரிவித்துள்ளார்.