கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!
இந்த திகதியில் தான் ஜனாதிபதி தேர்தல்… யாராலும் தடுக்க முடியாது! அரசியல் முக்கியஸ்தர் அதிரடி

இலங்கையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நகரில் (25-05-2024) நடைபெற்ற கட்சியின் நிகழ்வில் பிரதம அதிதியாக கந்துரட ஜனதா பெரமுனே தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வி.ரதாகிருஷ்ணன் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜயதாச ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்க்கமான பலம் வாய்ந்த கட்சியாக செயற்படும் என்றும் தெரிவித்திருந்தார்.