இனி இலங்கை பேருந்துகளுக்கு நடத்துனர்கள் தேவையில்லை!

இலங்கையில் பொதுப் போக்குவரத்துக்கு மின்னணு கட்டண முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பணப் பயன்பாட்டைக் குறைத்து பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அதன்படி வங்கிக் அட்டைகள் மூலமாகவும் அதற்கான கட்டணங்களைச் செலுத்த முடியும்.
அதன்படி, எதிர்காலத்தில் அனைத்து பேருந்துகளுக்கும் மின்னணு கட்டண உபகரணங்கள் வழங்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதற்கான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.