போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை.
இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் பகல் வேளையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும் ஜூன் 4 ஆம் திகதி இரவு வேளையில் மட்டும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.