போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இன்றைய தினமும் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்க முடியாத நிலை
நாடளாவிய ரீதியாக இன்றைய தினமும் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே, 12.5 கிலோ கிராம், 5 கிலோம் கிராம மற்றும் 2.3 கிலோ சயைமல் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக் கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு அருகாமையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.
3,900 மெற்றிக் டன் ஏற்றிய எரிவாயு நேற்று நாட்டை வந்தடைந்தது. அந்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சமையல் எரிவாயு கொள்கலனை பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினமும் வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக தெரியவந்துள்ளது.