இரண்டு வாரங்களுக்கான கற்பித்தல் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பதினைந்து நாட்களுக்கு வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாக இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னிட்டு சகல வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.