இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உயிரைப் பறித்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராகம வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் சனத் நிஷாந்தவின் சாரதியை எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வியாழன் (ஜன.25) காலை, மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனத்தை ஓட்டிச் சென்ற குறித்த சாரதியிடம் இன்று அதிகாலை பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
விபத்து நடந்த தருணத்தை அவர் பொலிஸாரிடம் அதிகாரிகளிடம் விவரித்ததாக கூறப்படுகிறது.