போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இராணுவச்சீருடையை அணிந்து திருட்டுச்சம்பவம் !
புத்தளம் மாவட்டம், சிலாபம் வீடொன்றில் இராணுவச்சீருடையை ஒத்த ஆடையணிந்தவர்கள் குழுவொன்றினால் பன்னிரண்டு இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் சிலாபம் – ரம்பேபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நடைபெற்றுள்ளது.
பாணந்துறை வலான மோசடி தடுப்பு பிரிவின் பொலிஸார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு எட்டு பேரை கொண்ட குழுவொன்று இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் தாங்கள் இராணுவத்தினர் என்றும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தாங்கள் குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து 12 இலட்சம் ரூபா மற்றும் பெருந்தொகையான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தாங்கள் இராணுவத்தினரோ, பொலிஸாரோ அல்ல என்றும் கொள்ளையிட மட்டுமே வருகை தந்ததாகவும் கூறிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
நகை உரிமையாளர்களினால் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.