இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 4 கோடி பெறுமதியான பொருட்கள்!
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட் 4 கோடி ரூபாவுக்கும் பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றையதினம் (07-02-2024) அழிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோ கிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்கள் கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது.
அவற்றை உடமையில் வைத்திருந்த நபர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், இன்று வவுனியா பம்பைமடுப்பகுதியில் வைத்து மேலதிக நீதவான் ஜெ. சுபாஜினி மற்றும், சிங்கள பிரதேசசபை செயலாளர், விமலவேணி நிசங்க,சுகாதாரபரிசொதகர்கள் முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது.