போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
இலங்கையில் உள்ள லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு சென்ற பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மலையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் (01-08-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பிரித்தானிய பெண், சுற்றுலா பொலிஸார் மற்றும் ஒரு குழுவினரின் உதவியுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எல்ல – பசறை வீதியில் அமைந்துள்ள லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு தரிசிப்பதற்காக நேற்று பயணித்த 33 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரே இவ்வாறு மலையில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
குறித்த அனர்த்தத்தில் அவரது வலது கால் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.