இலங்கைக்கு விரைவில் மகிழ்ச்சியான தகவலை அறிவிக்கவுள்ள முக்கிய நாடுகள்!

இலங்கைக்கான நிதி உத்தரவாதத்தை பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறுவதற்கு அந்த நிதி உத்தரவாதம் மிகவும் முக்கியமானது.
மேலும், இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு வழங்கவுள்ள ஆதரவை விரைவில் அறிவிக்க உள்ளனர்.