இலங்கையின் இயக்குனருக்கு கிடைக்கப்பெற்ற சர்வதேச விருது
இலங்கையின் பிரபல இயக்குனரான ஜகத் மனுவர்ணா 22 வது டாக்கா சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றுள்ளார்.
ஜகத் மனுவர்ணா இயக்கிய ரஹஷ் கியன கந்து (Whispering Mountains) படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
ரஹஷ் கியன கந்து (Whispering Mountains) படம் ஜகத் மனுவர்ணாவின் முதல் படம் என்பதும் சிறப்பு அம்சம்.