48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
இலங்கையில் அவசரநிலை தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக இலங்கை அரசாஙக்த்திற்கு எதிராக நாட்டு மக்கள் மிகபெரிய போராட்டத்தை முன்னெடுத்ததில், கோட்டாபய, மஹிந்த உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதன்பின், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூருக்கு தப்பினார். இந்த நிலையில்,இவர்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் ஆட்சியாளர்களின் மாளிகைகளுக்கு தீ வைத்தனர்.
இதற்கு பின்னர் பிரதமராக பதவி வகித்துவந்த ரணில் விக்கிரமசிங்க அவசர நிலை பிரகடனத்தை கடந்த ஜூலை 19-ம் திகதி அறிவித்தார்.
இதையடுத்து நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப்பெற்று முறைப்படி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பின்னர் மேலும் மக்கள் கொழும்பில், ஜானதிபதி மாளிகை முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமலில் உள்ள அவரச நிலை வரும் ஒகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.