போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் சைக்கிள் விபத்துக்கும் காப்புறுதி: அறிமுகப்படுத்திய காப்பீட்டு நிறுவனங்கள் !
இலங்கையில் சைக்கிள் தேவை அதிகரித்து, விலை அதிகரித்துள்ளதால், காப்பீட்டு நிறுவனங்கள், சைக்கிள்களுக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
இரண்டு ஆண்டு காலத்திற்குள் வாங்கப்பட்ட சைக்கிள்களுக்கு காப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சைக்கிள் விபத்தில் சிக்கினால் 100,000 ரூபாய் வரை காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், விபத்துக்குள்ளான சைக்கிளை பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தால், அந்த சைக்கிளின் முழு மதிப்பும் வழங்கப்படும்.
சைக்கிள் திருடப்பட்டால், காப்பீட்டு நிறுவனங்களிடம் சைக்கிளின் முழு மதிப்பையும் மீட்டெடுக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் முதன்முறையாக சைக்கிள் விபத்துகளுக்கு காப்புறுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.