ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி
இலங்கையில் போலி வைத்தியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! மக்களே அவதானம்

இலங்கையில், 40,000 அதிகமான போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இதேவேளை, அவர்களில் சிலர் பொதுமக்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறான நிலையில், போலி வைத்தியர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் 1907 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சலின் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களில் பெரும்பாலானோர் வைத்திய துறை தொடர்பில் எந்தவித முன் அனுபவமும் திறனும் இல்லாதவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.