இலங்கையில் மற்றுமொரு விமான நிலையம் அமைப்பதற்கு திட்டம்
இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான தேவையான பணிகள் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சர்வதேச விமான நிலையம் ஹிகுரங்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அதன் அடிப்படை நடவடிக்கைகளுக்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.