இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி : அமைச்சரின் கருத்தால் வெடித்த எதிர்ப்பு!
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருப்பது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அவ்வாறு தெரிவித்தது, பாரதூரமான விடயம் எனவும், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (19-02-2024) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,
இலங்கையின் இறையாண்மைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த அறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்ற கருத்தை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.