போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை பெண் பணியாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லையில் திருத்தம்
வீட்டு வேலைசார்ந்த பணிகளுக்காக வெளிநாடு செல்லும் இலங்கை பெண் பணியாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
வீட்டுப்பணிப்பெண்களாக வயது சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுபவர்களின் ஆகக்குறைந்த வயதெல்லை 25 வயதாகவும், மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆகக்குறைந்த வயதெல்லை 23 வயதுகளாகவும் பிற நாடுகளுக்கு 21 வயதுகளாகவும் உள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் வயது எல்லையை திருத்துவது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபக்குழுவொன்றை நியமிக்க கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, குறித்த அமைச்சரவை உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கைப் பெண்களை வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஆகக்குறைந்த வயதெல்லை 21 வயதுகளாக திருத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.