போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை வைத்தியசாலைகளில் மாலைத்தீவு நோயாளிகள்
மாலைத்தீவு மக்களுக்கு ஏற்படும் விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலைத்தீவின் இந்த முடிவு இலங்கை மருத்துவமனை அமைப்பில் உள்ள அவசர சிகிச்சையின் தரத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அதற்கான விமான போக்குவரத்து சேவையை தொடங்க இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மாலைத்தீவு மக்கள் அவசர சிகிச்சை பெறுவதற்காக இந்தியா சென்றிருந்த போதிலும், புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மாலைத்தீவு மற்றும் கட்டுநாயக்காவிற்கு இடையில் விமான அம்புலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.