உறவினர்களின் கண்ணீர் மல்க இடம்பெற்ற இளம் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள்!
விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த கொழும்பு பல்கலைக்கழக உதவி விரிவுரையாளரான 27 வயதான லக்மினி சுலோத்தம போகமுவவின் இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (21-02-2024) இடம்பெற்றிருந்தன.
இந்த விபத்து சம்பவம் சில நாட்களுக்கு முன் பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் மீது லொறி ஒன்று மோதியுள்ளது, பின்னர் உடனடியாக அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இது வியக்கத்தக்க வகையில் நாடு முழுவதும் பேசப்பட்டது. முகநூல் பக்கத்திலும் அவரைப் பற்றிய பல குறிப்புகள் வெளியாகின.
நேற்று (21) நீண்ட நேர கண்ணீர் அஞ்சலிக்கு பின்னர் அன்புக்குரியவர்கள் உட்பட அனைவரிடமும் விடைபெற்றார்
பிரதேசவாசிகள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் பலரின் அஞ்சலிக்கு மத்தியில் தலவத்துகொடை – வெலிப்பாறையில் உள்ள பொது மயானத்தில் அவரது சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.