போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு!
மொரட்டுமுல்லை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை இடைவேளையின் போது பல மாணவர்களுடன் குறித்த பாடசாலை மாணவர் இரும்பு ஊஞ்சலில் சவாரி செய்த போது அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவர் 14 வயதுடையவர் என்பதுடன் மொரட்டுவ, கீழ் இபித்த பிரதேசத்தில் வசித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.