நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19-05-2024) மாலை நாடாளுமன்ற மைதானத்தில் யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் நாள் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இதன்படி, அன்றையதினம் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் பொல்துவ சந்தி மற்றும் கெயின்ஹாம் சந்தியிலிருந்து நாடாளுமன்ற வீதியின் நுழைவுப் பாதை மற்றும் வெளியேறும் பாதை மூடப்படும்.
மேற்கண்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.