எரிபொருளுக்காக காத்திருந்த தாதி ஒருவரின் முக நூல் பதிவு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளுக்காக காத்திருந்த தாதி ஒருவர் ஒருவருக்கு பெற்றோல் இல்லையென தெரிவித்ததால் அங்கு சற்று பதற்ற நிலை உருவானது.
இது குறித்து நபர் ஒருவர் முகநூலில் பதிவிட்ட மனதை தொட்ட வரிகள்!
நீ பிறக்கும்போது உன்னை பாசத்தோடு தொட்டணைத்தவள்.
சிறுவயதில் உன் நோய்களுக்கு எல்லாம் மருந்தளிக்க இன்னுமொரு தாயாக தத்தெடுத்தவள்.
நீ வீதியில் போதையில் விழுந்தால்கூட அதை மன்னித்து உன் காயங்களுக்கு மருந்திட்டவள்.
உன் மனைவியின் பிரசவத்தில் உனக்கு தெய்வமாய் தெரிந்தவள்.
உனக்கு வாரிசு கிடைத்ததை உன் காதில் முதன்முதல் சொல்லியவள்.
உன் பிள்ளைகளின் முதலாவது மலசலங்களை அருவருக்காமல் அகற்றியவள்.
உன் தாயாரின் இறுதிநேரம்வரை அவள் உயிர்காக்க தூக்கம் கெடுத்தவள்.
உன் தந்தையின் மாரடைப்பின்போது காப்பாற்றிவிட்டவள்.
உன் சகோதரனின் விபத்தின்போது உயிர் பிரியாமல் காத்தவள்.
உன் சகோதரியின் புற்றுநோய்க்கு மருந்தேற்றி காத்தவள்.
உன் மூத்தமகனுக்கு கால்முறிந்தபோது நேராகப் பொருத்தியவள்.
உன் பெண்பிள்ளையின் அந்தரங்க நோயையெல்லாம் அடியோடு நீக்கியவள்.
உன் அடியும். உன் வசையாடலும். உன் தூசணமும். முறைப்பும். அவளை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.
யாவும் உன்னையே வந்து கொல்லும். முட்டாள் மனிதா. அவளுக்கு எரிபொருள் இல்லையென்றால் உன் சமூகம் நாளையே மரணிக்கும். என அவர் பதிவிட்டுள்ளார்.