இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் பலி!

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது மத்துகம – பெலவத்த பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த நபர் நெருசலின் காரணமாக மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் குறித்த நபரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் வலல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்த 70 வயதான வயோதிபர் என தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.