போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
எரிபொருளுக்கான டொலரை வழங்குவதற்கு ரணில் நடவடிக்கை
எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார்.
வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில இடங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
ஒருகொடவத்த பகுதியில் நேற்றிரவு எரிபொருள் கோரி மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இந்நிலையில் லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விநியோகம் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலுக்கு கட்டணம் செலுத்த முடியாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 7 நாட்களாக குறித்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. அத்துடன் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.