போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்து உயிரிழந்த சாரதி
பாணந்துறை – வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் 55 வயதான நபரென தெரியவந்துள்ளது.
இதன்போது சாரதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கப்படுகின்றன.