எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற தகராற்றின் காரணமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்!

எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற தகராற்றின் காரணமாக சந்தேக நபர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இச்சம்பவமானது பதுளை- பசறை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹிந்தகொட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற குழப்பத்தில் அனைவரையும் மிரட்டுவதற்கு நபர் ஒருவர் துப்பிக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது எரிபொருள் நிரப்பு ஊழியர் பொலிஸார் வந்து சம்பவம் குறித்து விசாரிக்கையில் யாருக்கும் காய்ம் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பம் தொடர்பில் சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.