இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
எரிபொருள் பெற வந்த நபருக்கு ரூ .25000 அபராதம் .

போலியான இலக்கத்தகடு பதித்து வாகனத்தில் வந்து பெட்ரோல் பெற வந்த நபரை பொலிஸார் மடக்கிபிடித்து அவரும் நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது வீரகுள – நெல்லிகஹமுல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறிய லொறியில் போலி இலக்கத் தகடு பொறுத்தி நபர் ஒருவர் எரிபொருள் பெற முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து அந்நபரை கைது செய்தத பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இந்நிலையில் அவருக்க ரூ.25,000 அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வத்துருகம, இகுருகல்லவைச் சேர்ந்த லக்ஷான் பண்டார என்ற லொறி சாரதிக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.