ஒரே வாரத்தில் 42 பேரை பலி எடுத்த கொரோனா வைரஸ்!
கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒரு வாரகால இடைவெளியில் சுமார் 42 மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக,கடந்த ஒரு வாரகாலப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 15ம் திகதி மட்டும் 129 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதுவரையில், நாட்டில் மொத்தமாக 668012 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஒரு வார காலப் பகுதியில் 42 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும்,20 வயதுக்கும் மேற்பட்ட சனத்தொகையில் கோவிட் முதல் தடுப்பூசியை இதுவரையில் 8 மில்லியன் பேர் பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.