களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு

இலங்கையில் மேல்மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தில் சிக்கி பெண்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.
புளத்சிங்கள பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 5 குடியிருப்புகள் புதையுண்டுள்ளன. 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் போலிஸ் தகவலகள் தெரிவிக்கினறன.
காணாமல் போனவர்கள் நிலச் சரிவில் புதையுண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கடந்த இரு நாட்களாக காணப்படும் சீரற்ற கால நிலை காரணமாக சில இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் இடம் பெற்றுள்ளன.
சப்ரகமுவ மாகாணத்தில் அரசாங்க பள்ளிக் கூடங்களுக்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தத்தில் 71 பேர் உயிரிழந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது