காணாமல் போன தனது மகளை கண்டுபுடித்து தருமாறு மின் கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்
தனது மகள் காணாமல் போனதையடுத்து கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்து உயர் மின்கம்பத்தில் ஏறி இளம் தந்தை ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவமானது குடாவெல, கலேவெல பிரதேசத்தி இடம்பெற்றுள்ளது.
குறித்த தந்தையின் சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் நிலையில் இன்னும் பொலிஸார் சிறுமியை மீட்டுத்தராததை கண்டித்து மற்றும் மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும் அந்நபர் உயர் மின் கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.