நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
கால் இழந்த தந்தையின் உழைப்பில் 3ஏ சித்தி பெற்ற மாணவி!
இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்ததில் கால் ஒன்றை இழந்த தந்தையின் உழைப்பில் முகவும் பின் தங்கிய கிராமத்தில் வறுமைக்கு மத்தியில் கலைப்பிரிவில் முதல் நிலை பெற்றுள்ளார்.
மன்னார் மூன்றாம் பிட்டியில் மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி நிலாமதி குடும்ப வறுமை காரணமாக மன்னாரில் உள்ள அன்னை இல்ல விடுதியில் தங்கி மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் கல்வி கற்று வந்த நிலையில் 2021 இடம் பெற்ற உயர் தர பரீட்சையில் கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
ஐந்து பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் தந்தை யுத்ததால் ஒரு காலை இழந்த நிலையிலும் கல்வியை கைவிடாத நிலாமதி 3ஏ சித்திகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் சட்டத்தரணியாகி பின் தங்கிய என் கிராமத்தை முன்னேற்றுவிப்பதுடன் எனது தந்தையின் கனவையும் நினைவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே தனது இலட்சியம் என நிலாமதி தெரிவித்துள்ளார்.