கிராம சேவகரின் பணியை இடையூறின்றி நடத்தஅவரின் பிறந்த நாளுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்த ஊர்மக்கள்!
யாழில் கிராம சேவகரின் பிற்ந்த நாளுக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பெட்ரோலை பரிசாக வழங்கியச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தப்பரிசானது கிராம சேவகருக்கு மிகுந்த தேவை இருப்பதால் இவ்வாறு தேவையறிந்து கொடுத்த பரிசிற்காக அனைவரும் அவ்வூர் பொதுமக்களை பாராட்டி வருகின்றனர்.
J/363 கிராம சேவகர் ரதீசன் அவர்களின் பிறந்த நாள் நேற்று நடைபெற்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கிராம சேவகரின் பணியை இடையூறின்றி நடத்த இந்த பெட்ரோல் வழங்கியுள்ளனர்.