நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
கிரிக்கெட்டில் 19 வயதுக்குப்பட்ட பெண்கள் அணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை
இலங்கை தேசிய கிரிக்கெட்டில் 19 வயதுக்குப்பட்ட பெண்கள் அணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவாகியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் கலையரசி என்ற மாணவியே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.
மேலும் இந்த மாணவிக்கும், மாணவியை பயிற்றுவித்த பாடசாலை பயிற்றுவிப்பாளர், மாவட்ட பயிற்றுவிப்பாளர், மாகாண பயிற்றுவிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினருக்கும் முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.