குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் பலி.
அம்பலாங்கொட பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பலாங்கொட, உரவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன், அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்