போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
குளத்தின் ஆழத்திலிருந்த பொதியை மீட்ட கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கல்பிட்டி தோராயடி குளத்தின் அடிப்பகுதியில் இருந்து 4.7 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகள் உள்ளிட்ட தங்கம் அடங்கிய பொதியை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் நேற்று கல்பிட்டியில் உள்ள தோராயடி தடாகத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் தோராயமாக 04 கிலோ 740 கிராம் எடையுள்ள பொதியானது தடாகத்தின் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும், தோராயடி கடற்கரைக்கு அருகில் டிங்கி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர், இது பொதியை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கடற்படையினர் இந்த விசேட நடவடிக்கையை தொரயடி லகூனில் மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் தடாகத்தில் தூக்கி எறியப்பட்ட தங்க பிஸ்கட்கள் மற்றும் திடமான தங்கப் பொருட்கள் உட்பட 04 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி மீட்கப்பட்டதுடன், தோராயடி கடற்கரைக்கு அருகில் டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே தங்கப் பொதியை கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காகவும், பின்னர் அவற்றை எடுத்துச் செல்வதற்காகவும் மூழ்கடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் டிங்கி அடங்கிய பொதி, சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.