குளத்தில் விழுந்து மாயமான இளைஞர் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது!
இளைஞர் ஒருவர் இரவு வேளையில் நடந்து சென்ற போது குளத்தில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றையதினம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மூர் குளத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காணாமல் போன இளைஞன் எபோட்சிலி- மொன்டிபெயார் தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் என்பவர் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
தனது நண்பர்களுடன் ஹட்டன் நகரிலிருந்து இரண்டு நண்பர்களுடன் குறித்த இளைஞன் மென்டிபெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்ற போதே இச்சம்பவம் நடந்துள்ளது.
இதனை அறிந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அந்த இரு இளைஞரடகளையும் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த இளைஞர் தவறி விழுந்தாரா அல்லது கொலையா, தற்கொலையா எனும் கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.