கேகாலைமாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்
சப்ரகமுவ மாகான சபை முன்னால் உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரனின்
வேண்டுகோளுக்கினங்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் கேகாலைமாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை
காரணமாக அவதியுறும் மக்களுக்கு உணவு பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணப் பொதிகளை
வழங்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய கேகாலை மாவட்டத்தில்
பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டதாக இ.தொ.காவின் முன்னால் மாகாண சபை
உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் தெரிவித்தார்.
மேலும் அன்றாட வருமானத்தை இழந்த குடும்பகளுக்கு கட்சி தொழில் சங்க பேதமின்றி
இ.தொ காவின் உப செயலாளரும் முன்னால் மாகான சபை உறுப்பினரும் பெருந்தோட்ட மனித
வள நிதியத்தின் சப்ரகமுவ மாகான இனைப்பாளருமாகிய அண்ணாமலை பாஸ்கரன் அவர்களின்
வேண்டுகோளுக்கினங்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் வழங்கி
வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கேகாலை மாவட்ட இளைஞர்களின் அமைப்பாளர்களான நேசகுமார், சிவாகரன்
செல்வகுமார் ரட்னகுமார், ஜெயகுமார், வனோஜன் சிரிஸ்கந்தகுமார், ஆகியோர் பங்கு
கொண்டனர்.
மேலும் இவ்வாறான அசாதாரன சூழ்நிலையில் மக்களுக்கு உலர் உணவு பொதிகளை தந்து
உதவி செய்த ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கேகாலை மாவட்ட மக்களும்
தானும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக அண்ணாமலை பாஸ்கரன் தெரிவித்தார்.