போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொரியாவில் பணி புரிவதற்கு இலங்கை இளைஞர்கள் 180 பேர் தயார்
இலங்கை அரசுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் பேரில் தென் கொரியாவில் பணி புரிவதற்கு இலங்கை இளைஞர்கள் 180 பேர் முதற்கட்டமாக பயணமாயினர்.
தென் கொரியாவில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடவுள்ள இவர்கள், மாதம் ஆயிரத்து 500 முதல் இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைந்துள்ள தென் கொரிய தூதரக அதிகாரிகளுக்கும் சிறிலங்காவின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பொறுப்பான அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ், அடுத்த ஆறு மாதங்களில் சுமார் ஐயாயிரத்து 600 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தென்கொரிய அரசு உறுதியளித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக இன்று 180 இளைஞர்கள் தென் கொரியாவுக்குப் புறப்பட்டார்கள். அடுத்தடுத்த வாரங்களில் வாரத்துக்கு இரண்டு விமானங்கள் என்ற அடிப்படையில் இலங்கையர்கள் அங்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியில் – டொலருக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில் – மேற்படி வெளிநாட்டுப் பணியாளர்கள் உரிய வகையில் நாட்டுக்கு அனுப்புகின்ற டொலர்கள், இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறிதளவேனும் உதவியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.