கொழும்பின் முக்கிய பகுதியில் கலகத்தடுப்பு பிரிவினர் குவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 73 ஆவது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடும் நிலையில், கொழும்பின் முக்கிய பகுதியில் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கருப்பு தினமாக அனுஸ்டிக்க போராட்டக்காரர்கள் தயாராகி வரும் நிலையில்,பெருமளவானோர் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இதனைடுத்தே இன்று கொழும்பின் முக்கிய பகுதியில் படயினர் குவிக்கப்ட்டுள்ளனர்.