போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பில் விபச்சார விடுதியை சுற்றி வளைத்து 6 பெண்கள் கைது
கொழும்பு – மாவத்தையில் விபசார விடுதி ஒன்றை சுற்றிவளைத்து 6 பெண்கள் உட்பட 8 பேரைக் கைது செய்ததாக கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பெண்கள் 2,000 ரூபா முதல் 5,000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பெண்களில் 21 வயதுடைய யுவதி ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது சம்பவம் கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இரகசியப் புலனாய்வாளராக நியமிக்கப்படிருந்த நிலையில் இடம்பெற்றுள்ளன.
மேலும் இவ்வாறு கைதான பெண்கள் வெல்லம்பிட்டிய, பசறை, கம்பளை மற்றும் வடுமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.