போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர்
லண்டனில் இருந்து இலங்கை வந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (10-06-2022) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து வருகை தந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்து வந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.
அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.