சனத் ஜயசூரிய இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக நியமனம்!
இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் சுற்றுலாத்துறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில், சுற்றுலாத்துறை அமைச்சு தொழில்துறையை மேம்படுத்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
கல்விமான்கள் பலரின் பங்களிப்புடன் சுற்றுலா ஆலோசனை சபையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , அந்த ஆலோசகர்களுக்கான நியமனங்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சர் தலைமையில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்றது.
அந்தவகையில் சனத் ஜயசூரிய இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.