நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
சுத்தமான குடிநீர் வழங்கக் கோரிய போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ; கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
2013 ஓகஸ்ட் முதலாம் திகதி வெலிவேரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (2024.05.17) கம்பஹா மேல் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது.
கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதால் தொழிற்சாலையை அகற்றி சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி 2013 ஜூலை 27 முதல் 5 நாட்கள் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை கலைக்க இராணுவம் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதுடன் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது, இளம் ஊடகவியலாளர்கள் சங்கமும் பிரதேசவாசிகளும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் மூவரடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி இவ்வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், வாதி மற்றும் பிரதிவாதியின் எழுத்துப்பூர்வமான பேச்சுக்கள் தாமதமானதால், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.