இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
சுவிட்சர்லாந்திற்கு பயணமாகிய சட்டத்தரணி சுகாஸ் மற்றும் சாணக்கியன்
சுவிட்சர்லாந்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், (Shanakiyan Rasamanickam) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் ஆகியோர் சூரிச் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
சுவிஸ் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முக்கிய அரசியல் கலந்துரையாடலுக்காக சுவிட்சர்லாந்திற்கு இன்றைய தினம் (14-06-2022) வருகை தந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி, சாணக்கியன், சுகாஸ் ஆகியோருக்கும் மகிழ்ச்சி. இந்த வாரத்தில் இருவரையும் ஒன்றாக நான் சந்திப்பேன். தமிழ் தேசிய உணர்வு உள்ளவர்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும்.
அதற்காக தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயற்படும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அன்புரிமையுடன் வேண்டுகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.